அபிஷன் ஜீவிந்த் நடிக்கும் “வித் லவ் ” படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

அபிஷன் ஜீவிந்த் கதாநாயகனாக அறிமுகமாகும் ‘வித் லவ்’ படத்தினை மதன் இயக்கியுள்ளார்.
அபிஷன் ஜீவிந்த் நடிக்கும் “வித் லவ் ” படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
Published on

சென்னை,

டூரிஸ்ட் பேமிலி படத்தின் மூலம் பிரபலமான இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் தற்போது கதாநாயகனாக வித் லவ் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் நடித்து வருகிறார். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

டூரிஸ்ட் பேமிலி படத்தில் அபிஷன் ஜீவிந்திடம் உதவி இயக்குனராக இருந்த மதன் இப்படத்தை இயக்கியுள்ளார். எம்ஆர்பி என்டர்டெயின்மென்ட் மற்றும் சவுந்தர்யா ரஜினிகாந்த் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான அய்யோ காதலே பாடல் வெளியாகி வைரலானது.

இந்நிலையில், வித் லவ் படம் பிப்ரவரி 6ந் தேதி வெளியாக உள்ளதாக சவுந்தர்யா ரஜினிகாந்த் அறிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com