படப்பிடிப்பில் விபத்து... நூலிழையில் உயிர் தப்பிய நடிகர் இம்ரான் ஹாஷ்மி

‘கன்மாஸ்டர் ஜி9’ படத்தின் சண்டைக் காட்சிப் படப்பிடிப்பின்போது கார் கவிழ்ந்து விழுந்ததில், நடிகர் இம்ரான் ஹாஷ்மி காயமின்றி தப்பினார்.

படப்பிடிப்பில் விபத்து... நூலிழையில் உயிர் தப்பிய நடிகர் இம்ரான் ஹாஷ்மி
Published on: 

‘கன்மாஸ்டர் ஜி9' படத்தின் கிளைமாக்ஸ் சண்டைக் காட்சிப் படப்பிடிப்பின்போது, கிரேனில் தொங்கவிடப்பட்ட கார் இம்ரான் ஹஷ்மிக்கு மிக அருகில் விழுந்ததாகக் கூறப்படும் நிலையில் நூலிழையில் தப்பினார்.

‘கன்மாஸ்டர் ஜி9’

பாலிவுட் நடிகர் இம்ரான் ஹாஷ்மி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘கன்மாஸ்டர் ஜி9’ (Gunmaaster G9). ஆதித்யா தத் இயக்கும் இப்படத்தில் ஜெனிலியா தேஷ்முக், அபர்சக்தி குரானா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படம் வரும் நவம்பர் 27-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

தலைக்கு அருகே கவிழ்ந்த கார்!

இந்நிலையில், இப்படத்தின் கிளைமாக்ஸ் சண்டைக் காட்சியைப் படமாக்கியபோது எதிர்பாராத சம்பவம் நிகழ்ந்துள்ளது. கிரேன் உதவியுடன் அந்தரத்தில் தொங்கவிடப்பட்டிருந்த கார் (SUV Car), திடீரென தலைகீழாகச் சுழன்று கீழே நிறுத்தப்பட்டிருந்த வேன் மீது விழுந்தது. அப்போது அருகில் நின்றிருந்த இம்ரான் ஹாஷ்மிக்கு மிக அருகில் விழுந்ததாகவும், இந்த விபத்தில் நூலிழையில் நடிகர் இம்ரான் ஹாஷ்மி காயமின்றி உயிர் தப்பியதாகவும் கூறப்படுகிறது.

காயமின்றி தப்பிய நடிகர்

இந்தச் சம்பவம் தொடர்பான படப்பிடிப்புத் தளத்தின் பின்னணிக் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. இதில் கார் அந்தரத்தில் கவிழ்ந்து வேன் மீது விழும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்தச் சம்பவம் திட்டமிட்ட காட்சியின் ஒரு பகுதியா அல்லது எதிர்பாராமல் நிகழ்ந்த விபத்தா என்பது குறித்து படக்குழு விளக்கம் அளிக்கவில்லை.

எனினும், இம்ரான் ஹாஷ்மி காயமின்றி தப்பியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரது செய்தித் தொடர்பாளரும் நடிகர் நலமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com