படப்பிடிப்பில் விபத்து... வாகனம் மோதி பிரபல நடிகை காயம்

‘தி வாக்சின் வார்' என்ற படத்தின் படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் பல்லவி ஜோஷி காயம் அடைந்துள்ளார்.
படப்பிடிப்பில் விபத்து... வாகனம் மோதி பிரபல நடிகை காயம்
Published on

பிரபல இந்தி நடிகை பல்லவி ஜோஷி. இவர் கன்னடம், மலையாளம், மராத்தி மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார். இரண்டு முறை சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றுள்ளார். கடந்த வருடம் திரைக்கு வந்து வரவேற்பை பெற்ற 'தி காஷ்மீர் பைல்ஸ்' படத்தில் பேராசிரியர் கதாபாத்திரத்தில் நடித்து பாராட்டு பெற்றார்.

பல்லவி ஜோஷி தி காஷ்மீர் பைல்ஸ் படத்தை இயக்கிய விவேக் அக்னிகோத்ரியின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது 'தி வாக்சின் வார்' என்ற படத்தில் பல்லவி ஜோஷி நடித்து வருகிறார். படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து வருகிறது. இந்த நிலையில் படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் பல்லவி ஜோஷி காயம் அடைந்துள்ளார்.

முக்கிய காட்சியொன்றை படமாக்கியபோது, வாகனம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து பல்லவி ஜோஷி மீது மோதியதாகவும், இதில் அவர் காயம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து பல்லவி ஜோஷி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பல்லவி ஜோஷி நடித்து வரும் 'தி வாக்சின் வார்' படத்தை தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், ஆங்கில மொழிகளில் ஆகஸ்டு மாதம் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com