

சென்னை,
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் திரிஷா. 22 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் கொடிகட்டி பறந்து வரும் திரிஷா குறித்து சமீபகாலமாக சர்ச்சைகள் அதிகரித்துள்ளன. திரிஷாவின் தனிப்பட்ட வாழ்க்கை மட்டுமின்றி திரையுலக வாழ்க்கை குறித்தும் அவ்வப்போது பரபரப்பு கிளம்பி வருகிறது. சமீபத்தில் தவெக தலைவரும், நடிகருமான விஜய்யுடன் அவர் திருமண நிகழ்வுக்கு சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சித்தார்த்தும், திரிஷாவும் நான்காவது முறையாக ஒரு புதிய தெலுங்கு படத்தில் ஜோடி சேர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகை திரிஷா, பொதுவாக இரவுநேரங்களில் தூக்கம் வராது என்றும், இரவு நேரங்களிலேயே அதிகம் சுறுசுறுப்பாக இருப்பதாகவும் அவரே முன்பு ஒருமுறை கூறியிருக்கிறார். மேலும், பிரேம்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதியுடன் நடித்திருந்த ‘96’ படத்தின் பெரும்பாலான காட்சிகள் இரவு நேரங்களிலேயே எடுக்கப்பட்டபோது, அதுகுறித்து பெரிய பிரச்னை ஏதுமில்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தூக்கமின்மையால் ஏற்படும் விளைவுகள் குறித்து நடிகை திரிஷா இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் “ஒரு மணிநேரத்துக்கு தூக்கத்தை இழந்தால், அதனை ஈடுகட்ட சுமார் 4 நாள்கள் ஆகுமென்றும், அப்படியென்றால் கணக்குப்படி 2062-ல்தான் நன்றாக உணர்வேன்” என்றும் அவரின் இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பதிவில் கூறியிருக்கிறார்.