

மும்பை,
பாலிவுட் திரையுலகில் அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து கலக்கி வருபவர் ரன்வீர் சிங் . இவரது நடிப்பில், வெளிவந்தர் துரந்தர் படத்தின் இரண்டு பாகங்களும் மெகா ஹிட் அடித்தன. இதற்கிடையே, அவரை சுற்றி புதிய சர்ச்சை ஒன்றும் வெடித்தது. அதாவது, 'டான் 3' படத்தில் நடிப்பதற்கு ஒப்புதல் தெரிவித்து, அந்த படத்தின் முன் தயாரிப்பு பணிகள் நடக்கும்போது அதிலிருந்து திடீரென விலகினார்.
இதனால் படத்தின் தயாரிப்பாளர்களான ரிதேஷ் சித்வானி மற்றும் பர்ஹான் அக்தர் ஆகியோர் தங்களுக்கு ரூ. 45 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டினார்கள். இதையடுத்து, மேற்கு இந்திய திரைப்பட தொழிலாளர்கள் கூட்டமைப்பு, ரன்வீர் சிங் பணிபுரியும் படங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்க மாட்டோம் என அறிவித்தது. இது பாலிவுட் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. திரைப்பட தொழிலாளர்கள் கூட்டமைப்புக்கு எதிராக ரன்வீர் சிங் சட்டப்பூர்வமாக நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இதையடுத்து, இந்திய திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் கில்டு அமைப்பு ஆகியவை சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன. இதில் உடன்பாடு ஏற்பட்டதால், ரன்வீர் சிங் மீதான தடையைத் திரும்ப பெறப்பட்டுள்ளது. ரன்வீர் சிங் நோட்டீஸ் அனுப்பியதால், தனது முடிவில் இருந்து கூட்டமைப்பு பின் வாங்கியதாக பாலிவுட் வட்டாரத்தில் தற்போது பேசப்படுகிறது.