இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!


இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!
x

லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'கூலி' திரைப்படம் ஆகஸ்ட் 14-ந் தேதி வெளியாக உள்ளது.

சென்னை,

'மாநகரம்' படத்தை இயக்கி பிரபலமானவர் லோகேஷ் கனகராஜ். அதை தொடர்ந்து கார்த்தி நடித்த 'கைதி', விஜய்யின் 'மாஸ்டர்', கமல்ஹாசனின் 'விக்ரம்' படங்களை டைரக்டு செய்தார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த 'லியோ' திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.600 கோடிக்கு மேல் வசூலானது. லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்ஸ் என்ற கான்செப்ட்டை தொடங்கி அதன் கீழ் தொடர்ந்து பல படங்களை இயக்கி வருகிறார். இதற்காகவே லோகேஷ் கனகராஜ் இயக்கும் படங்களின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது.

தற்போது லோகேஷ் கனகராஜ் ரஜினிகாந்த்தை வைத்து 'கூலி' படத்தினை இயக்கி வருகிறார். கூலி திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 14-ந் தேதி திரைக்கு வர உள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் பின்னணி வேலை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது எக்ஸ் தளத்தில் அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதாவது, 'கூலி' படத்தின் புரமோஷன் பணிகளில் கலந்து கொள்ள உள்ளதால், தற்காலிகமாக சமூக வலைதள பக்கத்தில் இருந்து விலகுவதாக கூறி லோகேஷ் கனகராஜ் அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

1 More update

Next Story