'வார்த்தைகளை விட செயல் வலிமை மிக்கது'- ராகவா லாரன்ஸ் செய்த நெகிழ்ச்சி செயல்

வார்த்தைகளை விட செயல் வலிமை மிக்கது என்று லாரன்ஸ் கூறினார்.
image courtecy:twitter@offl_Lawrence
image courtecy:twitter@offl_Lawrence
Published on

சென்னை,

நடிகர் ராகவா லாரன்ஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், " புதுக்கோட்டையைச் சேர்ந்த சிவசக்திக்கு 4 வயதாக இருந்தபோது, அவரது தாய் எங்களிடம் உதவி கேட்டு வந்தார். அவரது தந்தை குடும்பத்தை விட்டு சென்றதால், சிவசக்தியையும் அவரது சகோதரியையும் தாயே கவனித்துக் கொண்டு வந்திருந்தார். பின்னர் அவர்கள் இருவரும் என் வீட்டில் வளர்ந்தார்கள்.

சிவசக்தி தற்போது கணிதத்தில் டிகிரி முடித்துவிட்டு தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். அவரது கனவான காவல் உதவி ஆய்வாளர் ஆக வேண்டும் என்பதை நோக்கி அவர் உழைத்து வருகிறார். நிறைய பேருக்கு உதவவும் அவர் விரும்புகிறார். கல்வி சக்தி வாய்ந்த ஆயுதம் அதை வைத்து இந்த உலகத்தையே மாற்றலாம். வார்த்தைகளை விட செயல் வலிமை மிக்கது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன் அவர், உனக்கு செய்த உதவியைபோல நீ பிறருக்கும் செய்ய வேண்டும் என்று கூறி, ஒரு சிறுவனை அவரிடம் கொடுத்தார். இந்த நெகிழ்ச்சி செயல் குறித்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com