ஜனாதிபதி முர்முவுடன் நடிகர் அமீர்கான் திடீர் சந்திப்பு


ஜனாதிபதி முர்முவுடன் நடிகர் அமீர்கான் திடீர் சந்திப்பு
x

நடிகர் அமீர்கான் டெல்லியிலுள்ள ராஷ்டிரபதி பவனியில் ஜனாதிபதி திரவுபதி முர்முவை நேரில் சந்தித்துள்ளார்.

டெல்லி,

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராகவும் தயாரிப்பாளராகவும் இருப்பவர் அமீர்கான். இவர் தற்போது ஆர்.எஸ்.பிரசன்னா இயக்கியுள்ள சித்தாரே ஜமீன் பர் என்ற படத்தில் நடித்துமுடித்துள்ளார். இதில் நடிகை ஜெனிலியா கதாநாயகியாக நடித்துள்ளார். கடந்த வாரம் வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில், அமீர்கான் ஜனாதிபதி திரௌபதி முர்முவை, டெல்லியிலுள்ள ராஷ்டிரபதி பவனியில் இன்று (ஜூன் 24) சந்தித்துள்ளார். இதுகுறித்த பதிவை அமீர்கான் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இருப்பினும், இந்தச் சந்திப்பில் அவர்கள் பேசிய உரையாடல்கள் குறித்த எந்தவொரு தகவலும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.

1 More update

Next Story