இன்ஸ்டா டிரெண்டில் இணைந்த நடிகர் அஜித்

இன்ஸ்டாகிராமில் வைரலாக பரவி வரும் "Transition Reels" எனும் முறையில் அஜித் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இன்ஸ்டா டிரெண்டில் இணைந்த நடிகர் அஜித்
Published on

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக மட்டுமின்றி, ஒரு தீவிர கார்பந்தய வீரராகவும் திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித்குமார். இவர் குட் பேட் அக்லி படத்திற்கு பிறகு கார் ரேசில் கவனம் செலுத்தி வருகிறார். கடந்த ஆண்டு முதல் கார் ரேஸிங்கில் தீவிரம் காட்டி வரும் அஜித்குமார், அஜித்குமார் ரேஸிங் என்ற தனது சொந்த பந்தய நிறுவனத்தை உருவாக்கியுள்ளார். இந்தக் கார் பந்தய நிறுவனம் துபாய், பெல்ஜியம் போன்ற நாடுகளில் நடைபெற்ற கார் பந்தயங்களில் கலந்து கொண்டு பரிசுகளையும் வென்றுள்ளது. இந்த அணி ஐரோப்பிய எண்டூரன்ஸ் சாம்பியன்ஷிப்பில் கலந்துகொண்டு மூன்றாவது இடத்தைப் பிடித்து சாதனை படைத்தது. தொடர்ந்து பல்வேறு பந்தயங்களில் பங்கேற்க இந்த அணி திட்டமிட்டுள்ளது.

துபாயில் அஜித்தை திரை பிரபலங்கள் பலரும் தொடர்ச்சியாக சந்தித்து வருகின்றனர். அனிருத், சிபிராஜ், விக்னேஷ் சிவன் - நயன்தாரா தம்பதியினர், ஜிவி பிரகாஷ், மாதவன் ஆகியோர் அஜித்தை சமீபத்தில் சந்தித்தனர்.

இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் வைரலாக பரவி வரும் "Transition Reels" எனும் முறையில் அஜித் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com