மகன், மகளுடன் நடிகர் அஜித்குமார்.. வைரலாகும் ஷாலினி பகிர்ந்த புகைப்படகள்

நடிகர் அஜித் குமார் தன் பிள்ளைகளைக் கொஞ்சும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மகன், மகளுடன் நடிகர் அஜித்குமார்.. வைரலாகும் ஷாலினி பகிர்ந்த புகைப்படகள்
Published on

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழும் அஜித்குமார், கார் பந்தய வீரராகவும் தனது திறமையை நிரூபித்து வருகிறார். 'குட் பேட் அக்லி' படத்திற்கு பிறகு கார் ரேசிங்கில் அதிக கவனம் செலுத்தி வரும் அவர், 'அஜித்குமார் ரேசிங்' என்ற தனது சொந்த பந்தய அணியையும் தொடங்கினார்.

கார் ரேசிங்

இந்த அணி துபாய், பெல்ஜியம், ஸ்பெயின், அபுதாபி உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற பல்வேறு சர்வதேச போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை வென்றுள்ளது. தொடர்ந்து பல முக்கிய ரேசிங் தொடர்களிலும் அஜித்குமார் அணி கலந்து கொண்டு வருகிறது.

அஜித்குமார் கார் ரேசிங் மீதான பற்றால் அதில் ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் (மே.30) அவரது தாயார் காலமானார். அவரது தாயார் மறைவிற்கு முதல்-அமைச்சர் விஜய் மற்றும் திரை உலகினர் அஞ்சலி செலுத்தினர்.

‘ஏசியன் லெ மான்ஸ்’ கார்பந்தய தொடரில் பங்கேற்றுள்ள அஜித் குமாரை, காண சென்ற அவரது குடும்பத்தினர் பிரான்ஸ் சென்றிருந்தனர்.

பிரான்சில் நடைபெற்ற ‘ஏசியன் லெ மான்ஸ்’ கார் பந்தயத்தில் பங்கேற்ற முதல் இந்திய அணி என்ற சாதனையை அஜித்குமார் ரேஸிங் அணி படைத்துள்ளது. 13வது இடத்தை பிடித்த நிலையில், வரும் காலங்களில் சிறப்பாக முன்னேறுவோம் என அணியினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், நடிகர் அஜித் குமார் தன் மகன், மகளை மடியில் உட்கார வைத்து முத்தமிட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளன. இப்படங்களை ஷாலினி அஜித்குமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com