மீண்டும் பைக் பயணத்தில் நடிகர் அஜித்...! சமூக வலைதளங்களில் வைரலாகும் புகைப்படங்கள்

இங்கிலாந்தில் நடிகர் அஜித் பைக் பயணம் செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
Published on

லண்டன்,

நடிகர் அஜித் ஒரு பைக் பிரியர் என்பதும் அவர் இந்தியாவில் மட்டுமின்றி உலகின் பல நாடுகளில் பயணம் செய்து உள்ளார் என்பதும் தெரிந்ததே. அந்த வகையில் தற்போது இங்கிலாந்தில் நடிகர் அஜித் பைக் பயணம் செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இங்கிலாந்து நாட்டில் உள்ள சாலைகளில் அஜித் பைக் ஓட்டுவது போன்றும் இங்கிலாந்து சாலைகளில் அவர் பைக்குடன் நிற்பது போன்ற புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகின்றனர்.

சமீபத்திலே 'ஏகே 61' படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பை முடித்த அஜீத் இங்கிலாந்துக்கு பைக் பயணமாக சென்றுள்ளார் என்பதும் இதனை அடுத்து அவர் இந்தியா திரும்பியவுடன் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு ஆரம்பமாகும் என்றும் கூறப்படுகிறது.

'ஏகே 61' படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் புனேவில் நடைபெற இருப்பதாகவும், இந்த படப்பிடிப்பில் நடிகை மஞ்சுவாரியார் உள்பட பலர் கலந்து கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது.

எச். வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரிப்பில் ஜிப்ரான் இசையில் உருவாகி வரும் 'ஏகே 61' திரைப்படம் வரும் தீபாவளி அன்று திரைக்கு வரவுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com