வாக்களிப்பதற்காக துபாயில் இருந்து சென்னை திரும்பிய நடிகர் அஜித்

ஒவ்வொரு தேர்தலிலும் முதல் ஆளாக வந்து வரிசையில் நின்று வாக்கு செலுத்துவதை நடிகர் அஜித் வழக்கமாகக் கொண்டுள்ளார்.
வாக்களிப்பதற்காக துபாயில் இருந்து சென்னை திரும்பிய நடிகர் அஜித்
Published on

சென்னை,

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ளது. 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறும்.

இந்த தேர்தலில் வாக்களிப்பதற்காக நடிகர் அஜித் துபாயில் இருந்து சென்னை திரும்பியுள்ளார். திரைப்பட படப்பிடிப்பு மற்றும் கார் ரேஸ் போன்ற பணிகளுக்காக துபாயில் தங்கியிருந்த அஜித், நள்ளிரவில் சென்னை திரும்பியுள்ளார்.

ஒவ்வொரு தேர்தலிலும் முதல் ஆளாக வந்து வரிசையில் நின்று வாக்கு செலுத்துவதை நடிகர் அஜித் வழக்கமாகக் கொண்டுள்ளார். சென்னை திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை அஜித் செலுத்த உள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com