ஸ்டண்ட் மாஸ்டர்களுக்கு உதவிய நடிகர் அக்சய் குமார்

650 ஸ்டண்ட் மாஸ்டர்களுக்கு இன்சூரென்ஸ் எடுத்து கொடுத்துள்ளார் நடிகர் அக்சய் குமார்.
சென்னை,
நடிகர் அக்சய் குமார் ஸ்டண்ட் மாஸ்டர்களுக்கு இன்சூரென்ஸ் எடுத்து கொடுத்துள்ளார்.
சமீபத்தில் பா.ரஞ்சித்தின் 'வேட்டுவம்' படப்பிடிப்பின்போது ஸ்டண்ட் மாஸ்டர் மோகன் ராஜ் உயிரிழந்ததையடுத்து, 650 ஸ்டண்ட் மாஸ்டர்களுக்கு இன்சூரென்ஸ் எடுத்து கொடுத்துள்ளார் நடிகர் அக்சய் குமார்.
ஸ்டண்ட் மாஸ்டருக்கு விபத்து நேரிடும் பட்சத்தில், இந்த இன்சூரென்ஸ் மூலம் ரூ.5.5 லட்சம் வரை இலவசமாக சிகிச்சை பெற முடியும்.
அக்சய் குமார் சமீபத்தில் வெளியான கண்ணப்பா படத்தில் சிவன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மோகன்லால், பிரபாஸ் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்திருந்த இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.
Related Tags :
Next Story






