

பாலிவுட் திரையுலகில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் அக்சய் குமார். இவர் 1991-ம் ஆண்டு வெளியான "சவுகந்த்" திரைப்படத்தின் மூலம் திரையுலகில் நுழைந்தார். பல ஆண்டுகளுக்கு பிறகு, பல சிரமங்களைச் சந்தித்து, தற்போது முன்னணி நட்சத்திர ஹீரோவாகி இருக்கிறார்.
இந்த நிலையில், பேட்டி ஒன்றில் நடிகர் அக்சய் குமார் தனது பிட்னஸ் ரகசியத்தை பகிர்ந்து, ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு முக்கிய ஆலோசனையை வழங்கியுள்ளார். எப்போதும் நான் ஒரே விஷயத்தையே சொல்கிறேன், சூரியன் மறையும் முன்பே, குறிப்பாக மாலை 6:30 மணிக்குள் இரவு உணவை முடித்துவிடுங்கள். இதைவிட பெரிய மந்திரம் வாழ்க்கையில் இல்லை, டாக்டர்களும் இதையே ஒப்புக்கொள்வார்கள்.
மேலும், உடற்தகுதிக்காக குறுக்குவழிகளைத் தவிர்த்து, மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் வாழ்க்கை முறையை அமைத்துக்கொள்ள வேண்டும். உங்கள் உடற்தகுதிக்கு எது நல்லது, எது கெட்டது என்பதை புரிந்துகொள்வது மிகவும் முக்கியம். உடற்தகுதி என்பது ஒரு இன்ஸ்டன்ட் காபியாகவோ அல்லது 2 நிமிட நூடுல்ஸாகவோ இருக்கக்கூடாது," எனவும் அவர் அறிவுறுத்தினார்.