

மும்பை,
வழக்கமாக நிகழ்ச்சியின் தொடக்கத்தில் மேடையின் மையத்தில் நின்றபடி உரையாற்றும் அமிதாப் பச்சன், சமீபத்திய நிகழ்ச்சியில் அமர்ந்தபடியே உரையாற்றினார். இதற்கான காரணத்தை அவரே நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார். படப்பிடிப்பின்போது முந்தைய நாள் தவறி கீழே விழுந்ததில் முழங்காலில் காயம் ஏற்பட்டதாகவும் இதனால் எழுந்து நிற்பதில் சற்று சிரமம் ஏற்பட்டதாகவும் தெரிவித்தார்.
பிரபல இந்தி நடிகர் அமிதாப் பச்சன் (வயது 83). இவர் தொகுத்து வழங்கும் ‘கோன் பனேகா குரோர்பதி’ நிகழ்ச்சியின் 18-வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. வழக்கமாக நிகழ்ச்சியின் தொடக்கத்தில் மேடையின் மையத்தில் நின்றபடி உரையாற்றும் அமிதாப் பச்சன், சமீபத்திய நிகழ்ச்சியில் அமர்ந்தபடியே உரையாற்றினார். இதற்கான காரணத்தை அவரே நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார். படப்பிடிப்பின்போது முந்தைய நாள் தவறி கீழே விழுந்ததில் முழங்காலில் காயம் ஏற்பட்டதாகவும் இதனால் எழுந்து நிற்பதில் சற்று சிரமம் ஏற்பட்டதாகவும் தெரிவித்தார். எனினும், காயம் குறித்து ரசிகர்கள் கவலைப்பட வேண்டாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தி திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் அமிதாப் பச்சன். 50 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் பயணித்து வரும் இவர், ‘ஷோலே’, ‘தீவார்’, ‘டான்’, ‘அமர் அக்பர் அந்தோணி’, ‘பிளாக்’, ‘பிகு’ உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தனது சிறந்த நடிப்புக்காக 4 தேசிய திரைப்பட விருதுகள், தாதாசாகேப் பால்கே விருது, பத்மஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண் உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். சினிமாவை தாண்டியும் தொலைக்காட்சியில் பிரபலமான ‘கோன் பனேகா குரோர்பதி’ நிகழ்ச்சியை நீண்ட காலமாக தொகுத்து வழங்கி வருகிறார். அவரது கம்பீரமான குரலும், தனித்துவமான நிகழ்ச்சி தொகுப்பு பாணியும் ரசிகர்களிடையே தொடர்ந்து வரவேற்பை பெற்றுள்ளன. இவரது மகன் அபிஷேக் பச்சனும் பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக உள்ளார்.