அ.தி.மு.கவில் இருந்து விலகிய நடிகர் ஆனந்தராஜ் நடிகர் ரஜினிகாந்த்துடன் சந்திப்பு

அ.தி.மு.கவில் இருந்து விலகிய நடிகர் ஆனந்தராஜ் நடிகர் ரஜினிகாந்த்துடன் சந்தித்து பேசினார்.
அ.தி.மு.கவில் இருந்து விலகிய நடிகர் ஆனந்தராஜ் நடிகர் ரஜினிகாந்த்துடன் சந்திப்பு
Published on

சென்னை

கடந்த சில நாட்களுக்கு முன்னர் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்தார் நடிகர் ரஜினிகாந்த். அரசியலுக்கு வருவது உறுதி என்பதை அவர் தனது ரசிகர்கள் மத்தியில் சூசகமாக தெரிவித்தார். அவர் அரசியலுக்கு வருவதற்கு சிலர் ஆதரவாகவும், எதிராகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.ரஜினி அரசியலுக்கு வரப்போவது நூறு சதவீதம் உண்மை என அவர் நண்பர் ராஜ் பகதூர் ஊடகங்களில் கூறினார்.

இந்தநிலையில், நடிகர் ஆனந்தராஜ் ரஜினியை அவரது போயஸ்கார்டன் இல்லத்தில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது ஆனந்த்ராஜ் அரசியல் நிலைமை குறித்து பேசியிருப்பார் என நம்பத்தகுந்த வட்டாரம் தெரிவிக்கிறது. அதிமுகவிலிருந்து விலகிய நடிகர் ஆனந்த்ராஜ், அரசியல் குறித்து பல விமர்சனங்களை வைத்தார் எனபது குறிப்பிடதக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com