

நடிகர் அருள்நிதியின் பிறந்த நாளை முன்னிட்டு, ‘அருள்வான்’ மற்றும் ‘மை டியர் சிஸ்டர்’ படக்குழு சிறப்பு போஸ்டரை வெளியிட்டு வாழ்த்தியுள்ளது.
அருள்நிதி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர். 'வம்சம், மவுனகுரு, டிமாண்டி காலனி, ஆறாது சினம், இரவுக்கு ஆயிரம் கண்கள், கே-13' உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமடைந்தார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ‘டிமான்டி காலனி 2’ படம் வசூல் ரீதியாகவும், விமர்சனம் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. ‘டிமான்டி காலனி 3’ படம் செப்டம்பர் 10ம் தேதி வெளியாகவுள்ளது.
நடிகர்கள் அருள்நிதி, அருண் பாண்டியன் மற்றும் மலையாள நடிகை மம்தா மோகன்தாஸ் ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படம் ‘மை டியர் சிஸ்டர்’. இந்தப் படத்தை இயக்குநர் பிரபு ஜெயராம் இயக்கியுள்ளார். இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்கிறார்.
‘மை டியர் சிஸ்டர்’ படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், நடிகர் அருள்நிதியின் பிறந்த நாளை முன்னிட்டு, படக்குழு சிறப்பு போஸ்டரை வெளியிட்டுள்ளது.
கணேஷ் விநாயக் இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் கடந்த 17ம் தேதி வெளியான திரைப்படம் ‘அருள்வான்’. ரம்யா பாண்டியன், காளிவெங்கட், ஆரவ், கிருத்திகா மற்றும் ஜான்விஜய் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ‘90 பிக்சர்ஸ்’ நிறுவனத்தின் சார்பில் எஸ்.ஜி. சரவணன் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். மலைக்கிராமத்தில் வசிக்கும் மக்களின் வாழ்வையும், அங்குள்ள சிறுமியின் கல்வி தொடர்பான வலியையும் பேசும் படமாக இது எடுக்கப்பட்டுள்ளது.
நடிகர் அருள்நிதியின் பிறந்த நாளை முன்னிட்டு, ‘அருள்வான்’ படக்குழு சிறப்பு போஸ்டரை வெளியிட்டு வாழ்த்தியுள்ளது. அருள்நிதி நடித்த ‘அருள்வான்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றுவருகிறது.