“குட் நியூஸ்” திரைப்படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கிய நடிகர் அஸ்வின்

நாகேந்திர முருகன் இயக்கத்தில் ஜெயராம், அஸ்வின் நடிக்கும்‘குட் நியூஸ்’ படம் மூலம் கல்யாணி அனில் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.
“குட் நியூஸ்” திரைப்படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கிய நடிகர் அஸ்வின்
Published on: 

‘குட் நியூஸ்’ திரைப்படத்தின் டப்பிங் பணிகள், கடந்த நவம்பர் 11ம் தேதி சென்னை டி ஸ்டுடியோவில் பாரம்பரிய பூஜையுடன் தொடங்கின.

‘குட் நியூஸ்’ திரைப்படத்தின் மூலம் நாகேந்திர முருகன் இயக்குநராகத் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். குடும்ப உணர்வுகள் மற்றும் நம் அன்றாட வாழ்க்கையுடன் தொடர்புடைய மனித உறவுகளை மையமாகக் கொண்டு இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. அனைத்து வயதினரும் ரசிக்கும் வகையில் நகைச்சுவை, பாசம், உணர்ச்சிகரமான தருணங்கள் எனப் பல அம்சங்கள் நிறைந்த பொழுதுபோக்குத் திரைப்படமாக இது அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மூவிட்ரான் புரொடக்‌ஷன் நிறுவனம் தயாரித்துள்ள ‘குட் நியூஸ்’ திரைப்படம், குடும்ப உறவுகள், உணர்வுகள், நகைச்சுவை மற்றும் மனதைத் தொடும் தருணங்களை ஒன்றிணைக்கும் முழுமையான குடும்ப பொழுதுபோக்குப் படமாக உருவாகியுள்ளது.

கதாநாயகி அறிமுகம்

இப்படத்தின் மூலம் கல்யாணி அனில் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். இவர்களுடன் ஆஷா சரத், முத்துக்குமார், ஜாஃபர், குரேஷி, தீபா, வினோதினி, திவ்யா, மணிமேகலை, ஜென்சன் திவாகர் உள்ளிட்ட பல திறமையான கலைஞர்கள் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு சித்துக்குமார் இசையமைத்துள்ளார்.

படத்தின் படப்பிடிப்பு நிறைவு

நடிகர்கள் ஜெயராம், அஸ்வின் நடித்துள்ள ‘குட் நியூஸ்’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்துள்ளது. இதனைக் கொண்டாடும் வகையில், படப்பிடிப்புத் தளத்தில் நடைபெற்ற சுவாரஸ்யமான நிகழ்வுகள், நடிகர்கள் மற்றும் படக்குழுவினரின் மகிழ்ச்சியான தருணங்கள் இடம்பெற்றுள்ள சிறப்பு படப்பிடிப்பு வீடியோவைப் படக்குழு வெளியிட்டுள்ளது.

டப்பிங் பணிகள்

‘குட் நியூஸ்’ திரைப்படத்தின் டப்பிங் பணிகள், கடந்த நவம்பர் 11ம் தேதி சென்னை டி ஸ்டுடியோவில் பாரம்பரிய பூஜையுடன் தொடங்கின. பூஜையைத் தொடர்ந்து நடிகர் அஷ்வின் தனது கதாபாத்திரத்திற்கான டப்பிங் பணிகளைத் தொடங்கினார். இந்த நிகழ்வில் படத்தின் இணைத் தயாரிப்பாளர் சாய் பிரபு ஜெயக்குமார் மற்றும் இயக்குநர் நாகேந்திர முருகன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அறிமுக இயக்குநர் நாகேந்திர முருகன் இயக்கும் இப்படத்திற்கு, பிரபல இயக்குநர் பாண்டிராஜ் வசனங்கள் எழுதியுள்ளார். குடும்ப உறவுகள், அன்பு, நகைச்சுவை, மனிதர்களுக்கு இடையிலான புரிதல் என அனைத்து வயதினரும் ரசிக்கக்கூடிய அம்சங்களுடன் இப்படம் உருவாகி வருகிறது.

படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது படத்தொகுப்பு உள்ளிட்ட இறுதிக்கட்டப் பின் தயாரிப்புப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. டப்பிங் பணிகளும் தொடங்கியிருப்பதால், படக்குழுவினர் அடுத்தகட்ட பணிகளில் கவனம் செலுத்தி வருகின்றனர். டப்பிங் பணிகள் தொடங்கியுள்ள நிலையில், படத்தின் அடுத்தடுத்த விளம்பர அறிவிப்புகள் மற்றும் வெளியீட்டுத் தேதி குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

X