சஞ்சு சாம்சனை பாராட்டிய இயக்குனர் பசில் ஜோசப்

இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேற உதவிய சஞ்சு சாம்சனை பலரும் பாராட்டி வருகின்றனர்.
சஞ்சு சாம்சனை பாராட்டிய இயக்குனர் பசில் ஜோசப்
Published on

திருவனந்தபுரம்,

டி20 உலகக் கோப்பை தொடரின் 52வது லீக் ஆட்டத்தில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 195 ரன்கள் குவித்தது. ரோஸ்டன் சேஸ் 40 ரன்னும், ஹோல்டர் 37 ரன்னும், பாவெல் 34 ரன்னும் எடுத்தனர்.அடுத்து களமிறங்கிய இந்தியா 19.2 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 199 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றதுடன், அரையிறுதிக்கும் முன்னேறி அசத்தியது. அதிரடியாக ஆடி 97 ரன்கள் குவித்து இந்திய அணியை வெற்றிபெற வைத்த சஞ்சு சாம்சனுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

கேரளாவில் இருந்து தற்போது இந்திய அணிக்காக விளையாடும் ஒரே கிரிக்கெட் வீரரான சஞ்சு சாம்சனின் இந்த சிறப்பான ஆட்டத்தை மலையாள முன்னணி நடிகர்கள் பாராட்டி வருகின்றனர். மோகன்லால், மம்முட்டி, ஆகியோர் சஞ்சு சாம்சனை பாராட்டி பதிவிட்டுள்ளனர். அதே போல், கேரள முதல் மந்திரி, எதிர்க்கட்சித்தலைவர், சசிதரூர் ஆகியோரும் சாம்சனை பாராட்டி பதிவிட்டுள்ளனர்.

இந்த நிலையில், மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான சஞ்சு சாம்சனின் அபாரமான ஆட்டத்தை பாராட்டி இயக்குனர் பசில் ஜோசப் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com