நடிகை பானுப்பிரியா தாயார் மரணம்

80-களின் காலகட்டத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாக்களில் கொடிகட்டிப் பறந்தவர் நடிகை பானுப்பிரியா.
நடிகை பானுப்பிரியா தாயார் மரணம்
Published on

சென்னை,

கண்ணழகி நடிகை பானுப்ரியா பரத நாட்டியத்தில் சிறந்து விளங்கியவர்.. பெரும்பாலான இவருடைய படங்களில் நடனமாடும் கேரக்டராக அமைந்தன.அப்படி படங்கள் அமையாவிட்டாலும்கூட, வானமே எல்லை படம் போன்று, இவரது நடனத்துக்காகவே பாடல் பிரத்யேகமாக வைக்கப்படுவதுண்டு. 80-களின் காலகட்டத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாக்களில் கொடிகட்டிப் பறந்தவர் ஆவார்.

இந்தநிலையில் தமிழ் திரை உலகில் பிரபல நடிகைகளான பானுப்பிரியா, சாந்திப்பிரியா மற்றும் கோபி கிருஷ்ணன் ஆகியோரின் தாயார் லட்சுமி (வயது 83) நேற்றிரவு 7.15 மணிக்கு அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு காலமானார்.

அவரது இறுதி சடங்கு இன்று மாலை 3 மணிக்கு தி.நகர் டிரைவர்ஸ் காலனியில் உள்ள வீட்டில் நடந்தது.

X

Daily Thanthi
www.dailythanthi.com