நடிகர் பிஜிலி ரமேஷ் காலமானார்

நகைச்சுவை நடிகர் பிஜிலி ரமேஷ் உயிரிழந்தார்.
நடிகர் பிஜிலி ரமேஷ் காலமானார்
Published on

சென்னை,

சமூக வலைதளம் மூலம் பிரபலமாகி பின்னர் நகைச்சுவை நடிகரானார் பிஜிலி ரமேஷ்(46). இவர் கடந்த 2019-ம் ஆண்டு ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் வெளியான 'நட்பே துணை' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வந்தார். பொன்மகள் வந்தாள், ஆடை, கோமாளி, ஜாம்பி உள்ளிட்ட திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார்.

இந்தசூழலில், அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதன் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்தார். இந்நிலையில், அவர் சென்னையில் உயிரிழந்திருக்கிறார். இதனால், அவரது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். நடிகர் பிஜிலி ரமேஷின் இறுதிச்சடங்கு இன்று மாலை 5 மணிக்கு எம்.ஜி.ஆர் நகரில் உள்ள இல்லத்தில் நடைபெற உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com