கன்டெய்னர் லாரி மீது கார் மோதி மலை​யாள நடிகர் காயம்


கன்டெய்னர் லாரி மீது கார் மோதி மலை​யாள நடிகர் காயம்
x
தினத்தந்தி 16 Aug 2025 5:31 PM IST (Updated: 16 Aug 2025 5:33 PM IST)
t-max-icont-min-icon

மலை​யாள நடிகர் சங்​க​மான ‘அம்​மா’வுக்கு தேர்​தலில் வாக்​களிப்​ப​தற்​காக காரில் வந்த நடிகர் பிஜு குட்டன் கன்டெய்னர் லாரி மீது மோதியதில் காயமடைந்தார்.

பிரபல மலை​யாள நகைச்​சுவை நடிகர் பிஜு குட்​டன். இவர் ஏராள​மான படங்​களில் நடித்​திருக்​கிறார். சின்​னத்​திரை நிகழ்ச்​சிகளி​லும் பங்​கேற்று வரு​கிறார். இந்​நிலை​யில், மலை​யாள நடிகர் சங்​க​மான ‘அம்​மா’வுக்கு நேற்று தேர்​தல் நடந்​தது. இதில் வாக்​களிப்​ப​தற்​காகக் கோய​முத்​தூரிலிருந்து ஒரு காரில் கொச்​சிக்கு பிஜு குட்​டன் சென்று கொண்​டிருந்​தார்.

பாலக்​காடு அரு​கிலுள்ள வடக்​க​முறி​யில் நேற்று காலை 6 மணி​யள​வில் கார் சென்​று​கொண்​டிருந்த போது, சாலை​யோரம் நின்​றிருந்த கன்​டெய்​னர் லாரி மீது மோதி​யது. இதில் கார் ஓட்​டுநர் பலத்த காயம் அடைந்​தார். பிஜு குட்​டன் லேசான காயத்​துடன் தப்​பி​னார். இதையடுத்து அக்​கம் பக்​கத்​தினர் அவர்​களை மீட்டு பாலக்​காட்​டில் உள்ள மருத்​து​வ​மனை ஒன்​றில் சேர்த்​தனர். அங்கு கார் ஓட்​டுநருக்கு தீவிர சிகிச்சை அளிக்​கப்​பட்டு வரு​கிறது. இந்த விபத்து குறித்து போலீ​ஸார் வி​சா​ரணை நடத்​தி வரு​கின்றனர்​.

1 More update

Next Story