நடிகர் சிரஞ்சீவிக்கு ரூ.1,650 கோடி சொத்து

தெலுங்கு திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் சிரஞ்சீவிக்கு ரூ.1,650 கோடிக்கு சொத்துக்கள் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
நடிகர் சிரஞ்சீவிக்கு ரூ.1,650 கோடி சொத்து
Published on

 சிரஞ்சீவி எந்த சினிமா பின்புலமும் இல்லாமல் நடிக்க வந்து முன்னணி கதாநாயகனாக உயர்ந்தார். இதுவரை 150 படங்களுக்கு மேல் நடித்து இருக்கிறார்.

சமீபத்தில் சிரஞ்சீவி நடிப்பில் வந்த 'வால்டேர் வீரய்யா' தெலுங்கு படம் நல்ல வசூல் பார்த்துள்ளது. ஐதராபாத் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் உள்ள ஆடம்பர சொகுசு பங்களாவில் குடும்பத்துடன் வசிக்கிறார். 25 ஆயிரம் சதுர அடி பரப்பளவு கொண்ட இந்த பங்களா ரூ.30 கோடி செலவில் கட்டப்பட்டு உள்ளது.

நீச்சல் குளம், உடற்பயிற்சி கூடம், டென்னிஸ் மைதானம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் வீட்டில் உள்ளன. சென்னை, பெங்களூரு நகரங்களில் பல கோடி மதிப்புள்ள வீடுகள், நிலங்கள் வைத்து இருக்கிறார். நிறைய வெளிநாட்டு ஆடம்பர சொகுசு கார்களும் உள்ளன. சொந்தமாக ஜெட் விமானம் வைத்துள்ள நடிகர்களில் சிரஞ்சீவியும் ஒருவர்.

சினிமா பட நிறுவனம் தொடங்கி படங்கள் தயாரிக்கவும் செய்கிறார். ரூ.1,650 கோடி சொத்துடன் செல்வ செழிப்போடு வலம் வரும் சிரஞ்சீவி, தற்போது 67 வயதான நிலையிலும் தெலுங்கில் அதிகம் சம்பளம் பெறும் கதாநாயகனாக நீடிக்கிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com