நடிகர் சிரஞ்சீவி மகளின் முன்னாள் கணவர் 39 வயதில் மரணம்

காதலர் சிரீஷை ஐதராபாத்தில் உள்ள ஆரிய சமாஜ் கோவில் ஒன்றில் வைத்து 2007-ம் ஆண்டு, ஸ்ரீஜா திருமணம் செய்து கொண்டார்.
நடிகர் சிரஞ்சீவி மகளின் முன்னாள் கணவர் 39 வயதில் மரணம்
Published on

ஐதராபாத்,

நடிகர் சிரஞ்சீவியின் மகள் மற்றும் நடிகர் ராம்சரணின் தங்கையான ஸ்ரீஜா கொனிடலாவின் முன்னாள் கணவர் சிரீஷ் பரத்வாஜ். உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டு இருந்த சிரீஷ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்து உள்ளார். அவருக்கு வயது 39.

அவருக்கு நுரையீரல் பாதிப்பு உள்ளது என கூறப்படுகிறது. அவரது மறைவு செய்தியை நடிகை ஸ்ரீரெட்டி சமூக ஊடகத்தில் பகிர்ந்துள்ளார். அதில், சிரீஷின் பழைய புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, சிரீஷின் ஆன்மா சாந்தியடையட்டும் என தெரிவித்து உள்ளார்.

சிரீஷ் மற்றும் ஸ்ரீஜா இருவரும் 4 ஆண்டுகளாக ஒருவரையொருவர் காதலித்து வந்தனர். குடும்ப எதிர்ப்பையும் மீறி, வீட்டை விட்டு வெளியேறி காதலர் சிரீஷை கடந்த 2007-ம் ஆண்டு, ஐதராபாத்தில் உள்ள ஆரிய சமாஜ் கோவில் ஒன்றில் வைத்து ஸ்ரீஜா திருமணம் செய்து கொண்டார்.

அப்போது சிரீஷ், என்ஜினீயரிங் படிப்பில் 4-ம் ஆண்டு மாணவர் ஆவார். ஸ்ரீஜா, பட்டய கணக்காளர் (சி.ஏ.) படிப்பை படித்து வந்திருக்கிறார். இவர்களுடைய திருமணம் அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.

ஆனால், இந்த திருமணம் 2014-ம் ஆண்டு முடிவுக்கு வந்தது. இருவரும் பிரிந்து விட்டனர். இதன்பின்பு, 2016-ம் ஆண்டு கல்யாண் தேவ் என்ற தொழிலதிபருடன் பெங்களூருவில் சிறப்பான முறையில் ஸ்ரீஜாவுக்கு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com