நடிகர் தற்கொலை வழக்கு: கங்கனா ரணாவத்துக்கு போலீஸ் சம்மன்

நடிகர் தற்கொலை வழக்கு தொடர்பாக, நடிகை கங்கனா ரணாவத்துக்கு போலீஸ் சம்மன் அனுப்பி உள்ளது.
நடிகர் தற்கொலை வழக்கு: கங்கனா ரணாவத்துக்கு போலீஸ் சம்மன்
Published on

இளம் இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த மாதம் மும்பை பந்த்ராவில் உள்ள வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை கதையில் சுஷாந்த் சிங் நடித்ததன் மூலம் பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியில் வாரிசு நடிகர்கள் சுஷாந்த் சிங் வளர்ச்சியை தடுத்ததாகவும் இதன்மூலம் அவரை ஒப்பந்தம் செய்த பல தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களில் இருந்து நீக்கி விட்டதாகவும் இந்த வேதனையில் அவர் உயிரை மாய்த்துக்கொண்டார் என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகிறார்கள். சுஷாந்த் சிங் காதலி ரியா சக்கரவர்த்தி, இந்தி இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி உள்பட 38 பேரின் வாக்குமூலங்கள் பெறப்பட்டது. நடிகை கங்கனா ரணாவத் இந்தி திரையுலகினர் ஒதுக்கியதாலேயே சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்தார். சுஷாந்த் சிங் பலகீனமானவர் இல்லை. அவரது படங்களை அங்கீகரிக்கவில்லை. விருதுகள் வழங்காமலும் புறக்கணித்தனர் என்றும் கூறியிருந்தார்.

இதையடுத்து வாக்குமூலம் அளிக்க நேரில் ஆஜராகுமாறு கங்கனா ரணாவத்துக்கு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com