

திருப்பதி,
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் தனுஷ். இவர் 'இட்லி கடை'. "தேரே இஸ்க் மெய்ன்" ஆகிய படங்களின் வெற்றியை தொடர்ந்து, போர்தொழில் பட இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் கர என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இந்த நிலையில், நடிகர் தனுஷ் ஆந்திர மாநிலம் திருப்பதியில் உலகப்புகழ் பெற்ற ஏழுமலையான் கோவிலில் தனது மகன்களுடன் சாமி தரிசனம் செய்துள்ளார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும், திர்த்த பிரசாதங்களும் வழங்கப்பட்டன. சாமி சரிசனம் செய்து வெளியே வந்த பின்னர் அவரை பார்த்த ரசிகர்கள் அவருடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.