நடிகர் கவுண்டமணியின் மனைவி காலமானார்


Actor Goundamanis wife passes away
x
தினத்தந்தி 5 May 2025 12:40 PM IST (Updated: 5 May 2025 1:34 PM IST)
t-max-icont-min-icon

பல வருடங்கள் தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் கவுண்டமணி.

சென்னை,

80-களில் துவங்கி இன்று வரை அனைவரின் மனதிலும் நீங்கா இடத்தை பிடித்துள்ள நகைச்சுவை நடிகர் கவுண்டமணி. இவர் பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த '16 வயதினிலே' படத்தின் மூலமாக முக்கிய கதாபாத்திர நடிகராக அறிமுகமானார்.

இதன்பின் கவுண்டமணி தொடர்ந்து பல வருடங்கள் தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தார். நடிகர் கவுண்டமணி, சாந்தி என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரு பெண் பிள்ளைகள் உள்ளனர்.

இந்நிலையில், கவுண்டமணியின் மனைவி சாந்தி காலமானார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள இல்லத்தில், இறுதிச் சடங்குகளுக்காக அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. இவரது மறைவுக்கு ரசிகர்களும், திரைப்பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

1 More update

Next Story