பெண் குழந்தைக்கு அப்பாவான நடிகர் ஹரிஷ் கல்யாண்

ஹரிஷ் கல்யாண் - நர்மதா தம்பதியருக்கு நேற்று பெண் குழந்தை பிறந்துள்ளது.
பெண் குழந்தைக்கு அப்பாவான நடிகர் ஹரிஷ் கல்யாண்
Published on

சென்னை,

நடிகர் ஹரிஷ் கல்யாண், கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான சிந்து சமவெளி படத்தின் மூலம் தனது திரைப்பயணத்தை தொடங்கினார். பின்னர் பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் வைல்ட்கார்டு என்ட்ரியாக கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றார்.

அதனைத் தொடர்ந்து பியார் பிரேமா காதல், இஸ்பெட் ராஜாவும் இதய ராணியும், பார்க்கிங், லப்பர் பந்து, டீசல் உள்ளிட்ட படங்களில் நடித்து ஹிட் கொடுத்து முன்னணி நடிகராக உருவெடுத்தார்.

இவர் 2022ஆம் ஆண்டு நர்மதா உதயகுமாரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், நேற்று (மார்ச் 2) ஹரிஷ் கல்யாண் - நர்மதா தம்பதியருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த மகிழ்ச்சியான செய்தியை தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஹரிஷ் கல்யாண் பகிர்ந்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள பதிவில், “இன்று (02.03.2026) நானும் என் மனைவி நர்மதாவும் எங்கள் பெண் குழந்தையை வரவேற்றுள்ளோம் என்ற அற்புதமான செய்தியை பகிர்ந்து கொள்வதில் என் இதயம் மகிழ்ச்சியால் நிரம்பியுள்ளது. தாயும் மகளும் ஆரோக்கியமாகவும் நலமாகவும் உள்ளனர்.

இந்த புதிய அழகான அத்தியாயத்தை தொடங்கும் தருணத்தில், எங்கள் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகளின் அன்பு மற்றும் ஆசீர்வாதங்களுக்கு மனமார்ந்த நன்றி. தொடர்ந்து ஆதரவளித்து, கருணை காட்டிய பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களுக்கும் எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com