சபரிமலை கோவிலில் ஜெயம் ரவி, ஜெயராம் சாமி தரிசனம்

ஜெயம் ரவி சபரிமலையில் சுவாமி தரிசனம் செய்துள்ளார். அவரை ஜெயராம் அழைத்துச் சென்ற வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருக்கிறது.
சபரிமலை கோவிலில் ஜெயம் ரவி, ஜெயராம் சாமி தரிசனம்
Published on

மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தில் ஜெயம் ரவி அருண்மொழி வர்மனாகவும், ஜெயராம் ஆழ்வார்க்கடியானாகவும் நடித்துள்ளனர். இந்த படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சிகளில் இருவரும் பங்கேற்று வருகிறார்கள். இந்த நிலையில் கொச்சிக்கு சென்ற ஜெயம் ரவியும் ஜெயராமும் அங்கிருந்து சபரிமலைக்கு போய் சாமி தரிசனம் செய்தனர்.

அந்த புகைப்படங்களை ஜெயம் ரவி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு, ''பொன்னியின் செல்வனில் ஆழ்வார்க்கடியான் நம்பியைப்போல் நிஜ வாழ்க்கையிலும் அன்போடு என்னை வழிநடத்தும் குருசாமி ஜெயராமுடன் பம்பையில்" என்ற பதிவையும் பகிர்ந்துள்ளார். இருவரும் அய்யப்பனை தரிசனம் செய்த புகைப்படங்கள் வலைத்தளத்தில் வைரலாகின்றன. ஏற்கனவே சென்னையில் நடந்த நிகழ்ச்சியொன்றில் ஜெயம் ரவி பேசும்போது, ஜெயராமுடன் பல வருடங்களாக எனக்கு நெருக்கமான நட்பு உள்ளது. அதையும் தாண்டி எனக்கு குருசாமியாக இருந்துள்ளார். நிஜ வாழ்க்கையில் வழிகாட்டியாகவும் இருக்கிறார். அவருடன் பொன்னியின் செல்வனில் இணைந்து நடித்தது மகிழ்ச்சி யாக உள்ளது" என்றார். இப்போது அய்யப்பனையும் ஒன்றாக தரிசனம் செய்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com