'கலகலப்பு 3' அப்டேட் கொடுத்த நடிகர் ஜீவா

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் ஜீவா கலகலப்பு 3 படத்தின் அப்டேட் பகிர்ந்துள்ளார்.
'கலகலப்பு 3' அப்டேட் கொடுத்த நடிகர் ஜீவா
Published on

சென்னை,

சுந்தர்.சி இயக்கத்தில் கடந்த 2012-ம் ஆண்டு வெளியான படம் 'கலகலப்பு'. விமல், மிர்ச்சி சிவா, சந்தானம், மனோபாலா, ஓவியா, அஞ்சலி உள்ளிட்டோர் நடித்திருந்த இப்படத்தின் பெரும் வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து இரண்டாம் பாகம், 'கலகலப்பு-2 என்ற பெயரில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியானது.

இதில் ஜீவா, ஜெய் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த இரண்டு பாகங்களும் பெரியளவில் வரவேற்பைப் பெற்ற நிலையில் கலகலப்பு 3 படத்தின் படப்பிடிப்பு பணிகள் விரைவில் தெடங்க உள்ளன. இது குறித்த அறிவிப்பை நடிகை குஷ்பு சமீபத்தில் வெளியிட்டார்.

இந்த நிலையில் சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் ஜீவா, கலகலப்பு 3 படத்தின் அப்டேட் பகிர்ந்துள்ளார். அதாவது, சுந்தர்.சி சார் மதகஜராஜா படத்தின் ஒரு சிறிய பகுதியை வைத்து கலகலப்பு 3 திரைப்படத்தை இயக்க திட்டமிட்டிருந்தார். ஆனால் மதகஜராஜா திரைப்படம் வெளியான பிறகு அந்த திட்டம் மாறிவிட்டது. கலகலப்பு 3 திரைப்படம் அடுத்த ஆண்டுதான் தொடங்க இருக்கிறது" என்று கூறியுள்ளார்.

இந்த படத்தில் சிவா, விமல் மற்றும் வாணி போஜன் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் இப்படம் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com