ஜீவா நடிக்கும் “தலைவர் தம்பி தலைமையில்” படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

நிதிஷ் சஹதேவ் இயக்கத்தில் ஜீவா நடிக்கும் 45 வது படத்தை கண்ணன் ரவி தயாரிக்கிறார்.
ஜீவா நடிக்கும் “தலைவர் தம்பி தலைமையில்” படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
Published on

சென்னை,

'ஆசை ஆசையாய்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் ஜீவா. இவர் 'சிவா மனசுல சக்தி, கற்றது தமிழ், கொரில்லா, ரவுத்திரம், கலகலப்பு 2 போன்ற படங்களில் நடித்து தனக்கென ரசிகர்களை உருவாக்கி வைத்துள்ளார். கடைசியாக இவர் பிளாக் படத்தில் நடித்திருந்தார். இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தையடுத்து ஜீவா, பா.விஜய் இயக்கத்தில் 'அகத்தியா' படம் கலவையான விமர்சங்களை பெற்றது.

நடிகர் ஜீவா நடிக்கும் 45-வது படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது. மலையாளத்தில் வெளியாகி வெற்றிபெற்ற பேலிமி படத்தின் இயக்குநர் நிதிஷ் சகாதேவ் இயக்கத்தில் இப்படம் உருவாகிறது. படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியுள்ளது. ஜீவாவுடன் தம்பி ராமையா, பிரார்தனா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். குடும்பப் பின்னணி கதையாக உருவாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ராவண கோட்டம் படத்தை தயாரித்த கண்ணன் ரவி இப்படத்தை தயாரிக்கிறார். இப்படத்திற்கு தலைவர் தம்பி தலைமையில் என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், தலைவர் தம்பி தலைமையில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. வித்தியாசமாக அமைந்துள்ள இந்த போஸ்டர் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com