நடிகர் ரஜினிகாந்துடன் நடிகர் கமல்ஹாசன் மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சந்திப்பு

சென்னையில் நடிகர் ரஜினிகாந்தை, நடிகர் கமல்ஹாசன் மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஆகியோர் நேரில் சந்தித்தனர்.
நடிகர் ரஜினிகாந்துடன் நடிகர் கமல்ஹாசன் மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சந்திப்பு
Published on

சென்னை,

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகியோர் நடிப்பில் 'விக்ரம்' திரைப்படம் உருவாகி உள்ளது. இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் இந்தப் படத்தில் காளிதாஸ் ஜெயராம், நரேன், காயத்ரி, ஸ்வஸ்திகா கிருஷ்ணன் சேம்பன் வினோத் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

வரும் ஜூன் 3-ம் தேதி விக்ரம் திரைப்படம் உலகம் முழுதும் திரையரங்கில் வெளியாக இருக்கிறது. எனவே படத்திற்கான புரமோஷன் வேலைகள் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன

இந்நிலையில் விக்ரம் படக்குழுவினர் ரஜினிகாந்தை சந்தித்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன. முன்னதாக நடிகர் கமல்ஹாசன், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் ரஜினிகாந்தை அவரது வீட்டில் நேரில் சந்தித்துள்ளனர். அந்தப் புகைப்படங்களை வெளியிட்டுள்ள இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கமல்ஹாசன் சார் மற்றும் ரஜினி சார் ஆகியோருக்கு நன்றி. என்ன ஒரு நட்பு. எங்களுக்கு உத்வேகமாக இருப்பதற்கு நன்றிகள்" என்று பதிவிட்டுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com