

அபுதாபி,
அபுதாபியில் உள்ள யாஸ் தீவில், சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி (IIFA) விருது விழா நடைபெற்றது. இந்த விழாவை பாலிவுட் நடிகர்கள் விக்கி கவுசல் மற்றும் அபிசேக் பச்சன் இருவரும் தொகுத்து வழங்கினர். இந்த விழாவில் நடிகர் கமல்ஹாசனுக்கு சர்வதேச IIFA சார்பில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
இந்திய திரைத்துறைக்கு பல ஆண்டுகளாக மிகச்சிறந்த பங்களிப்பை வழங்கியதற்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது. இந்த விருதை நடிகர் கமல்ஹாசனுக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் வழங்கினார். இந்த விழாவில் பாலிவுட் திரையுலகைச் சேர்ந்த பல முன்னனி நடிகர், நடிகைகள், இயக்குனர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Iconic, Visionary, Unstoppable!#KamalHaasan's indomitable talent shines bright as he wins the IIFA trophy for "Outstanding Achievement in Indian Cinema.''#IIFA2023 #IIFAONYAS #YasIsland #InAbuDhabi #NEXA #CreateInspire #SobhaRealty #EaseMyTrip@yasisland @VisitAbuDhabi pic.twitter.com/BvGwBJPhFr
IIFA (@IIFA) May 27, 2023 ">Also Read: