இயக்குநர் லோகேஷ் கனகராஜின் பதிவுக்கு நடிகர் கமல்ஹாசன் பதில் டுவிட்..!!

இயக்குநர் லோகேஷ் கனகராஜின் டுவிட்டர் பதிவுக்கு நடிகர் கமல்ஹாசன் பதிலளித்துள்ளார்.
இயக்குநர் லோகேஷ் கனகராஜின் பதிவுக்கு நடிகர் கமல்ஹாசன் பதில் டுவிட்..!!
Published on

சென்னை,

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர்கள் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகியோர் இணைந்து நடித்துள்ள திரைப்படம் 'விக்ரம்'. மேலும் இந்த படத்தில் நரேன், அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

நடிகர் சூர்யா இந்த படத்தில் கவுரவ வேடத்தில் நடித்துள்ளார். ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். கிரிஷ் கங்காதரன் இதற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். பெரிய எதிர்பார்ப்புகளிடையே திரையரங்குகளில் வெளியான 'விக்ரம்' திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் வெற்றி குறித்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது டுவிட்டரில், "நான் இந்த அளவுக்கு உணர்ச்சிவசப்பட்டதில்லை. எனக்கும், விக்ரம் படத்திற்காக நீங்கள் வழங்கி வரும் பேராதரவு வியப்படைய வைக்கிறது. இந்த அன்பை நான் எப்படி திரும்ப கொடுக்கப் போகிறேன் என்று தெரியவில்லை. கமல்ஹாசன் சாருக்கும் மக்களுக்கும் நன்றியுள்ளவனாக இருப்பேன். அனைவரையும் நேசிக்கிறேன்" என்று அவர் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் இதற்கு பதிலளித்துள்ள நடிகர் கமல்ஹாசன், இதுதொடர்பாக தனது டுவிட்டரில், "அன்பான ரசிகர்களுக்கு நீங்கள் செய்யக்கூடிய ஒரே விஷயம் என்னவெனில் ஒருபோதும் மனநிறைவை அடையாமல் இருப்பது தான்!

நேர்மையாக உங்கள் வேலையை செய்யுங்கள், அப்படி செய்தால் மக்கள் அதை நேசிப்பார்கள், மதிப்பார்கள். என்னுடைய ஆற்றல் அவர்களின் அன்பினால் வருகிறது. உங்களது அனைத்து முயற்சிகளுக்கும் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் ஆதரவு எப்போதும் உண்டு" என்று அவர் பதிவிட்டுள்ளார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com