மீண்டும் திரைக்கு வரும் நடிகர் கமல்ஹாசனின் 'ஆளவந்தான்' திரைப்படம்

கமல் நடிப்பில் 'ஆளவந்தான்' திரைப்படம் வெளியாகி 22 ஆண்டுகள் நிறைவடையவுள்ளது.
மீண்டும் திரைக்கு வரும் நடிகர் கமல்ஹாசனின் 'ஆளவந்தான்' திரைப்படம்
Published on

சென்னை, 

கடந்த 2001-ஆம் ஆண்டு இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்து வெளியான திரைப்படம் 'ஆளவந்தான்'. தயாரிப்பாளர் தாணுவின் 'வி கிரியேஷன்ஸ்' தயாரித்திருந்த இப்படத்தில் ரவீனா டாண்டன், மனிஷா கொய்ராலா, சரத்பாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

இப்படம் தமிழ் மற்றும் இந்தியில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில், 22 வருடத்திற்கு பிறகு 'ஆளவந்தான்' திரைப்படம் டிஜிட்டல் வெர்ஷனில் ரீ- ரிலீஸுக்கு தயாராகியுள்ளதாக சில மாதங்களுக்கு முன்பாக அறிவிப்பு வெளியானது.

இந்த நிலையில் கமல் நடிப்பில் 'ஆளவந்தான்' திரைப்படம் வெளியாகி 22 ஆண்டுகள் நிறைவடைய உள்ளதையொட்டி, உலகமெங்கும் உள்ள 1,000 திரையரங்குகளில் படத்தை மீண்டும் திரையிட உள்ளதாகவும், படத்தின் ரீ- ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தயாரிப்பாளர் தாணு தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். 

X

Daily Thanthi
www.dailythanthi.com