'வாழை' திரைப்படத்திற்கு நடிகர் கார்த்தி பாராட்டு!

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான 'வாழை' திரைப்படத்திற்கு நடிகர் கார்த்தி பாராட்டு தெரிவித்துள்ளார்.
'வாழை' திரைப்படத்திற்கு நடிகர் கார்த்தி பாராட்டு!
Published on: 

சென்னை,

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள படம் 'வாழை'. இந்த படத்துக்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படத்தில் நடிகர் கலையரசன் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் நிகிலா விமல், திவ்யா துரைசாமி, 'வெயில்' படம் மூலம் பிரபலமான பிரியங்கா மற்றும் சில சிறுவர்கள் நடித்துள்ளனர்.சமீபத்தில், 'வாழை' படத்தின் இரண்டு பாடல்கள் அடுத்தடுத்து வெளியாகி கவனம் பெற்றன. நாளை இப்படம் வெளியாக உள்ளநிலையில், சமீபத்தில் இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்த நிலையில் வாழை படத்தின் முன் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. விழாவில் தயாரிப்பாளர் தாணு, இயக்குநர்கள் ரஞ்சித், வெற்றிமாறன், சசி, மிஷ்கின், அருண் மாதேஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். மேலும் படத்தை பார்த்த பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்தப் படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது. உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது.

இந்த நிலையில் வாழை படம் குறித்து நடிகர் கார்த்தி தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளப் பதிவில், "நம் பால்ய வருடங்களை அனைவராலும் நினைவு கூற முடியும். ஆனால், அதையே ஒரு திரைக்காவியமாய் படைத்து அதில் நம்மை உள்ளிழுத்து நமக்கு மிக நெருக்கமானவராய் ஆகிவிட்டார் மாரி.சந்தோஷின் இசையையும், தேனி ஈஸ்வரின் காட்சியையும் பயன்படுத்தி வாழ்க்கையின் நிதர்சனத்தையும் வலிகளையும் அழகாய் சொல்லியிருக்கிறார். நடிப்பு என்று எதையும் சொல்லி விட முடியாது அவ்வளவு யதார்த்தம். வாழை பார்த்தபின் இயக்குநர் மாரி செல்வராஜ் மீது பெரும் அன்பு உண்டாகிறது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

X

Follow us on Google
Daily Thanthi
www.dailythanthi.com