சூர்யாவின் “சீன்” படக்குழுவை பாராட்டிய நடிகர் கார்த்தி

சூர்யா, நஸ்லென், நஸ்ரியா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘சீன்’ படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
சூர்யாவின் “சீன்” படக்குழுவை பாராட்டிய நடிகர் கார்த்தி
Published on: 

‘சீன்’ பட இயக்குநர் ஜித்து மாதவனின் திரைக்கதையை நடிகர் கார்த்தி பாராட்டியுள்ளார்.

ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடித்த ‘சீன்’ படம் இன்று காலை 6 மணிக்கு வெளியானது. சுமார் மூன்றரை வருடங்களுக்குப் பிறகு இன்று காலை 6 மணி காட்சிகள் ஆரம்பமானது. அதிகாலை முதலே ரசிகர்கள் தியேட்டர்களுக்குத் திரண்டு வந்து பட வெளியீட்டைக் கொண்டாடினார்கள்.

இப்படத்தில் சூர்யா போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். சூர்யா மற்றும் ஜோதிகாவின் 2டி என்டர்டெயின்மென்ட், ழகரம் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு சுஷின் ஷ்யாம் இசையமைத்துள்ளார். இப்படம், நடிகர் சூர்யாவின் இரண்டாவது தயாரிப்பு நிறுவனமான ழகரம் புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ளது.

முன்பதிவில் ரூ.10 கோடி வசூல்

‘சீன்’ படம் முன்பதிவில் மட்டும் இதுவரை ரூ.10 கோடி வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

சட்ட விரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை

சென்னை ஐகோர்ட்டு ‘சீன்’ படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிடத் தடை விதித்துள்ளது. படத்தின் காட்சிகள் மற்றும் பாடல்களை பதிவு செய்து சமூக ஊடகங்களில் வெளியிடவும் தடை விதித்து உத்திரவிட்டுள்ளது.

‘சீன்’ படத்தை பாராட்டிய கார்த்தி

இந்நிலையில் ‘சீன்’ படத்தைப் பார்த்த கார்த்தி தனது எக்ஸ் தளப்பக்கத்தில் படக்குழுவினரை பாராட்டி பதிவிட்டிருக்கிறார். அவரது பதிவில், “இயக்குநர் ஜித்து மாதவனின் அற்புதமான திரைக்கதை மற்றும் நடிப்பு சூப்பர். இசையமைப்பாளர் சுஷின் மற்றும் படக்குழுவுக்கு எனது வாழ்த்துகள்" என்று பதிவிட்டிருக்கிறார்.

X