நயன்தாராவுக்கு ஆதரவு தெரிவித்த நடிகர் கார்த்திக் குமார்

தனுஷ் படத்தில் நடித்திருந்த பல நடிகைகள் நயன்தாராவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
நயன்தாராவுக்கு ஆதரவு தெரிவித்த நடிகர் கார்த்திக் குமார்
Published on

சென்னை,

நடிகை நயன்தாராவின் சிறுவயது வாழ்க்கை முதல் முன்னணி கதாநாயகியாக உயர்ந்தது வரை உள்ள சம்பவங்களை தொகுத்து ஒரு ஆவணப்படம் தயாராகி உள்ளது. 'நயன்தாரா: பியாண்ட் தி பேரி டேல்' என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்த ஆவணப்படம் நாளை நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.

சமீபத்தில் இதன் டிரெய்லர் வெளியானது. அதில், தனுஷ் தயாரிப்பில் நயன்தாரா நடிப்பில் வெளியான நானும் ரவுடிதான் திரைப்படத்தின் சிறு காட்சி இடம்பெற்றிருந்தது. இதனால் அந்த வீடியோவுக்கு எதிராக நானும் ரவுடிதான் படத்தின் தயாரிப்பாளர் என்ற முறையில் நடிகர் தனுஷ் ரூ. 10 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு நயன்தாராவுக்கு நோட்டீஸ் அனுப்பிய இருக்கிறார்.

இதனையடுத்து, தன்மீதுள்ள தனிப்பட்ட வெறுப்பால் நடிகர் தனுஷ் பழிவாங்குகிறார் என்று நடிகை நயன்தாரா பரபரப்பு குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார். இது தொடர்பாக நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிக்கையையும்  வெளியிட்டுள்ளார்.

இதனையடுத்து, தனுஷ் படத்தில் நடித்திருந்த பல நடிகைகள் நயன்தாராவுக்கு ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், நயன்தாரா, தனுஷ் நடிப்பில் வெளியான 'யாரடி நீ மோகினி' படத்தில் நடித்திருந்த கார்த்திக் குமாரும் நயன்தாராவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com