

சென்னை,
மறைந்த இசையமைப்பாளர் தேவாவின் சகோதரரும், இசையமைப்பாளருமான சபேஷ் கடந்த ஆண்டு உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். இந்நிலையில், 37 வயதே ஆன அவரது மகனும் நடிகருமான கார்த்திக் சபேஷ் இன்று காலமானார்.
உடல்நலக்குறைவு காரணமாக கார்த்திக் சபேஷ் காலமானார் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். தம், வல்லவன், பட்டத்து யானை, உதயம் என்.எச்.4, பர்மா உள்ளிட்ட தமிழ்த் திரைப்படங்களில் நடித்தவர் ஆவார். கடந்த சனிக்கிழமை இசையமைப்பாளர் தேவா மறைந்த சோகம் மறைவதற்குள் ஒரே குடும்பத்தில் மீண்டும் சோகம் ஏற்பட்டுள்ளது.