உடல்நலக்குறைவால், ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய நடிகர் கோட்டா ஸ்ரீனிவாச ராவ்


உடல்நலக்குறைவால், ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய நடிகர் கோட்டா ஸ்ரீனிவாச ராவ்
x
தினத்தந்தி 12 Jun 2025 10:11 AM IST (Updated: 12 Jun 2025 1:34 PM IST)
t-max-icont-min-icon

நடிகர் கோட்டா ஸ்ரீனிவாச ராவ் மிகவும் உடல் நலிந்த நிலையில் ஆளே அடையாளம் தெரியாமல் காணப்படுகிறார்.

ஐதராபாத்,

ஆந்திராவைச் சேர்ந்த பிரபல நடிகரான கோட்டா சீனிவாச ராவ் தெலுங்கில் பல படங்களில் குணசித்திர வேடத்திலும் வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்து பிரபலமானவர். இதைத்தொடர்ந்து 2003-ம் ஆண்டு வெளியான 'சாமி' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். மேலும், "திருப்பாச்சி, குத்து, ஏய், கோ, சகுனி" போன்ற பல படங்களில் நடித்துள்ளார். நடிகர், பாடகர், டப்பிங் கலைஞர் என பன்முக திறமை கொண்ட இவர், மொத்தம் 750 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார்.

இவரது நடிப்பில் கடைசியாக 2023-ம் ஆண்டு 'சுவர்ண சுந்தரி' என்ற படம் வெளியானது. வயது மூப்பு மற்றும் உடல் நிலை காரணமாக அவரால் சரியாக நடக்கக்கூட முடியவில்லை என்பதால் திரையுலகில் இருந்து ஒதுங்கியே இருக்கிறார்.

இதற்கிடையில், பிரபல தயாரிப்பாளர் பந்த்லா கணேஷ், நடிகர் கோட்டா ஸ்ரீனிவாச ராவ் வீட்டிற்கு நேரில் சென்று சந்தித்துள்ளார். அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அதில், கோட்டா ஸ்ரீனிவாஸ் மிகவும் உடல் நலிந்த நிலையில் ஆளே அடையாளம் தெரியாமல் காணப்படுகிறார். கால்களில் புண்களுடன் கட்டுப்போட்ட நிலையில் காணப்பட்ட அவரது உடல்நிலை குறித்து ரசிகர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.

1 More update

Next Story