துபாயில் அஜித்தை சந்தித்த நடிகர் மாதவன்

துபாயில் அஜித்தை திரை பிரபலங்கள் பலரும் தொடர்ச்சியாக சந்தித்து வருகின்றனர்.
துபாயில்  அஜித்தை சந்தித்த நடிகர் மாதவன்
Published on

நடிகர் அஜித் குமார் திரைப்படங்களை தாண்டி கார் பந்தயத்திலும் கவனம் செலுத்தி வருகிறார் அஜித். கடந்த ஆண்டு, அபுதாபி, பார்சிலோனா, மலேசியா உள்பட பல்வேறு நாடுகளில் நடந்த கார் பந்தய போட்டிகளில் தனது அஜித்குமார் ரேஸிங் அணியினருடன் கலந்து கொண்ட அவர் இப்போது, 24 ஹெச் சீரிஸ்- மத்திய கிழக்கு டிராபிக்கான பந்தயத்தில் கலந்துகொண்டிருக்கிறார்.

துபாயில் அஜித்தை திரை பிரபலங்கள் பலரும் தொடர்ச்சியாக சந்தித்து வருகின்றனர். அனிருத், சிபிராஜ், விக்னேஷ் சிவன் - நயன்தாரா தம்பதியினர், ஜிவி பிரகாஷ் ஆகியோர் அஜித்தை சமீபத்தில் சந்தித்தனர்.

இந்நிலையில், அஜித்தை துபாய் ரேஸிங் களத்தில் நடிகர் மாதவன் நேரில் சந்தித்துள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com