பழம்பெரும் பாலிவுட் நடிகை உயிரிழப்பு - ரசிகர்கள் அதிர்ச்சி

பழம்பெரும் பாலிவுட் நடிகை மது மல்ஹோத்ரா.
பழம்பெரும் பாலிவுட் நடிகை உயிரிழப்பு - ரசிகர்கள் அதிர்ச்சி
Published on

மும்பை,

பழம்பெரும் பாலிவுட் நடிகை மது மல்ஹோத்ரா (வயது 71). இவர் 1970 முதல் 1990 வரை இந்தி சினிமாவில் பல்வேறு திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றுள்ளார். இவர் நடித்த கலா பதார், வித்தா, சம்போத் போன்ற இந்தி திரைப்படங்கள் மிகவும் பிரபலமாகும்.

இதனிடையே, மராட்டிய மாநிலம் அந்தேரியில் வசித்து வந்த மது மல்ஹோத்ரா உடல்நலக்குறைவு காரணமாக கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மது மல்ஹோத்ரா நேற்று முன் தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சிகிச்சையின் போது மாரடைப்பு ஏற்பட்டு மது மல்ஹோத்ரா உயிரிழந்தார். மது மல்ஹோத்ராவின் மறைவால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com