சாலை விபத்தில் சிக்கிய 'லியோ' பட நடிகர் குடும்பம்

நடிகர் விஜயின் ‘லியோ’ படத்தில் அவரது மகனாக நடித்தவர் மேத்யூ தாமஸ். இவரது குடும்பம் சாலை விபத்தில் சிக்கியுள்ளது.
actor Mathew Thomas road accident
Published on

லோகேஷ் கனகராஜ் நடிப்பில் நடிகர்கள் விஜய், திரிஷா உள்ளிட்டப் பலர் நடித்திருந்த திரைப்படம் 'லியோ'. இதில் விஜயின் மகனாக நடித்தவர் மேத்யூ தாமஸ். 'லியோ' படத்தை அடுத்து தனுஷ் இயக்கி வரும் 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்?' படத்திலும் மேத்யூ தாமஸ் நடித்துள்ளார். கேரளாவைச் சேர்ந்த இவர், மலையாள படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில், அவரது குடும்பத்தினர் சாலை விபத்தில் சிக்கிய நிலையில், சம்பவ இடத்திலேயே அவரது உறவினர் ஒருவர் பலியாகி உள்ளார்.

மேத்யூவின் அம்மா சூசன், அப்பா பிஜு, அண்ணன் ஜான் மற்றும் குடும்ப உறவினர்கள் என அனைவரும் கொச்சியில் நடைபெற்ற உறவினர் ஒருவரின் இறுதி சடங்கு நிகழ்வில் கலந்து கொள்ள நேற்று தங்களது காரில் புறப்பட்டு சென்றுள்ளனர்.

இறுதிசடங்கு நிகழ்வில் பங்கேற்று விட்டு திரும்பும்போது, தேசிய நெடுஞ்சாலையில் மேத்யூ தாமஸ் குடும்பத்தினர் சென்ற கார் மதியம் ஒரு மணியளவில் விபத்தில் சிக்கி உள்ளது. இதில் மேத்யூ தாமஸின் உறவினர் பீனா டேனியல் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மேத்யூவின் அண்ணன் ஜான் காரை ஓட்டிச் சென்றிருக்கிறார். அவர் லேசான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருகிறார். மேத்யூவின் பெற்றோர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com