நடிகர் விவேக் மறைவுக்கு நடிகர் மோகன்லால், தனுஷ் ஆகியோர் இரங்கல்

நடிகர் விவேக் மறைவுக்கு நடிகர் மோகன்லால் மற்றும் தனுஷ் ஆகியோர் டுவிட்டரில் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்.
நடிகர் விவேக் மறைவுக்கு நடிகர் மோகன்லால், தனுஷ் ஆகியோர் இரங்கல்
Published on

சென்னை, 

மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் விவேக் இன்று அதிகாலை காலமானார்.

நடிகர் விவேக்கின் திடீர் மரணம் திரையுலகினரையும், ரசிகர்களையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. தற்போது அவரின் உடல் விருகம்பாக்கத்திலுள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு நண்பர்கள், திரைத்துறை பிரபலங்கள், நடிகர், நடிகைகள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நடிகர் விவேக் மறைவுக்கு திரையுலகினர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில் நடிகர் விவேக் மறைவுக்கு நடிகர் மோகன்லால் மற்றும் தனுஷ் ஆகியோர் டுவிட்டரில் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர். 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com