கோவிலுக்குள் காரில் சென்று சர்ச்சையில் சிக்கிய நடிகர் மோகன்லால்

மலையாள பட உலகில் முன்னணி கதாநாயகனாக இருப்பவர் மோகன்லால்.
கோவிலுக்குள் காரில் சென்று சர்ச்சையில் சிக்கிய நடிகர் மோகன்லால்
Published on

மலையாள பட உலகில் முன்னணி கதாநாயகனாக இருப்பவர் மோகன்லால். தமிழில் கோபுர வாசலிலே, இருவர், உன்னைப்போல் ஒருவன், ஜில்லா, காப்பான் ஆகிய படங்களில் நடித்து இருக்கிறார்.

தற்போது மோகன்லால் கோவில் வாசல்வரை காரில் சென்று சர்ச்சையில் சிக்கி உள்ளார். கேரளாவில் கொரோனா வேகமாக பரவி வருவதால் கோவில்களில் குறைந்த எண்ணிக்கையிலேயே பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். குருவாயூர் மற்றும் சபரிமலை கோவில்களில் முன்பதிவு செய்யும் பக்தர்களை மட்டுமே அனுமதிக்கின்றனர்.

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக குருவாயூர் கோவில் வளாகத்துக்குள் வாகனங்கள் செல்லவும் தடை விதித்து உள்ளனர். இந்த நிலையில் குருவாயூர் கோவிலுக்கு நடிகர் மோகன்லால் தனது மனைவியுடன் சாமி கும்பிட வந்தார். அப்போது அவரது காரை கோவில் வளாகத்துக்குள் செல்ல பாதுகாப்பு பணியில் இருந்த ஊழியர்கள் அனுமதித்தனர். இதற்கு எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன.

இதையடுத்து மோகன்லால் காரை கோவில் உள்ளே அனுமதித்த ஊழியர்கள் 3 பேரை கோவில் நிர்வாகம் தற்காலிக பணி நீக்கம் செய்துள்ளது. இது குறித்து விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com