செளகார் ஜானகி உடலுக்கு நடிகர் எம்.எஸ் பாஸ்கர் நேரில் அஞ்சலி

400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் தனது திறமைகளை காட்டி மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்துள்ளார்
அஞ்சலி செலுத்திய பாஸ்கர்
Published on

சென்னை,

பழம்பெறும் நடிகையான சௌகார் ஜானகியின் மறைவுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய நடிகர் எம்.எஸ்.பாஸ்கர்.

பழம்பெறும் நடிகையான சௌகார் ஜானகி(வயது 94) தமிழ், தெலுங்கு,மலையாளம், இந்தி போன்ற பல மொழிகளில் 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து வந்தார். சுவாச பிரச்சனை காரணமாக சென்னையில் உள்ள காவேரி தனியார் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.இந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது மறைவுக்கு திரைத்துறையினரும், அரசியல் தலைவர்களும், ரசிகர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் எம்.எஸ்.பாஸ்கரும் ஜானகியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் பேட்டி

அஞ்சலி செலுத்த வந்த நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் கூறியதாவது :-

”சௌகார் ஜானகி அம்மா மிகச் சிறந்த நிறைவான ஒரு வாழ்க்கையை வாழ்ந்து மறைந்துள்ளார். பல மொழிகளில் பேச கூடியவர்கள் மற்றும் திறமையான நடிகர் என்றும், அவரது பெயர் கேட்டாலே ஒட்டுமொத்த தென்னிந்திய திரைத்துறையிலும் மிகப்பெரிய மரியாதை உண்டு” என பெருமிதமாக கூறினார்.

மேலும், அவரது திரைப்படத்தில் உள்ள ”பார்த்த நியாபகம் இல்லையோ பாட்டை இன்றளவும் ரசிக்காதவர்கள் இல்லை. அம்மாவின் ஆன்மா இறைவன் அடியை சேரட்டும் என இறைவனை வேண்டி கொள்கிறேன்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com