பேட்ட பட நடிகர் நவாசுதீன் சித்திக் ரூ.100 கோடி கேட்டு சகோதரர் மீது வழக்கு

பேட்ட பட நடிகர் நவாசுதீன் சித்திக் சகோதரர் வழக்கில் கோர்ட்டு புது உத்தரவு பிறப்பித்துள்ளது.
பேட்ட பட நடிகர் நவாசுதீன் சித்திக் ரூ.100 கோடி கேட்டு சகோதரர் மீது வழக்கு
Published on

பிரபல இந்தி வில்லன் நடிகர் நவாசுதீன் சித்திக். இவர் தமிழில் ரஜினிகாந்தின் பேட்ட படத்திலும் வில்லனாக நடித்து இருந்தார். ஏற்கனவே ஆலியா என்பவரை நவாசுதீன் சித்திக் திருமணம் செய்து பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

தன்னை அடித்து துன்புறுத்தியதாகவும், வீட்டை விட்டு வெளியேற்றியதாகவும் நவாசுதீன் சித்திக் மீது ஆலியா குற்றச்சாட்டுகள் சுமத்தி வந்தார். இதுபோல் நவாசுதீன் சித்தக் மீது அவரது சகோதரர் ஷாமாசுதீன் சித்திக்கும் புகார் கூறினார்.

இதையடுத்து இருவர் மீதும் நவாசுதீன் சித்திக் மும்பை கோர்ட்டில் ரூ.100 கோடி நஷ்ட ஈடு கேட்டு மான நஷ்ட வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நவாசுதீன் சித்திக் சார்பில் ஆஜரான வக்கீல் "நவாசுதீன் சித்திக்கும், அவரது முன்னாள் மனைவி ஆலியாவும் பிரச்சினையை சுமூகமாக தீர்க்க பேசி வருகிறார்கள். எனவே ஆலியா மீது அவதூறு வழக்கு பதிவு செய்ய தேவை இல்லை'' என்றார்.

பின்னர் நீதிபதி அளித்த உத்தரவில், "சகோதரர்களான நவாசுதீன் சித்திக், ஷாமாசுதீன் சித்திக் இருவரும் வலைத்தளத்தில் ஒருவரை பற்றி ஒருவர் கருத்து வெளியிடுவதை நிறுத்த வேண்டும். பிரச்சினையை கோர்ட்டு அறையில் இருவரும் பேசி தீர்க்க வேண்டும்'' என்று குறிப்பிட்டு உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com