நடிகர் பிரபாஸ் நடித்துள்ள 'சலார்' படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு - படக்குழு அறிவிப்பு..!

கே.ஜி.எப். திரைப்படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து, இயக்குனர் பிரசாந்த் நீல் அடுத்ததாக 'சலார்' திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
நடிகர் பிரபாஸ் நடித்துள்ள 'சலார்' படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு - படக்குழு அறிவிப்பு..!
Published on

சென்னை,

கே.ஜி.எப். திரைப்படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து, இயக்குனர் பிரசாந்த் நீல் அடுத்ததாக 'சலார்' திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் 'பாகுபலி' திரைப்படத்தில் நடித்திருந்த பிரபாஸ் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானதில் இருந்து, இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

கே.ஜி.எப். திரைப்படத்தை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் 'சலார்' படத்தையும் தயாரிக்கிறது. இந்த படத்தில் வரதராஜ மன்னார் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் பிரித்விராஜ் நடிக்கிறார். 'சலார்' திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

இந்தப்படம் வரும் 28ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில், சலார் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்படுவதாக இன்று படக்குழு அறிவித்துள்ளது. எதிர்பாராத சில காரணங்களுக்காக படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்படுவதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின் காரணமாக தற்போது ரசிகர்கள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர். 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com