

திருமலை,
நேற்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பல முக்கிய பிரமுகர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று பல முக்கிய பிரமுகர்கள் சாமி தரிசனம் செய்தனர். நேற்று காலை வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நடிகர் பிரபு, அவ ரின் மனைவி, முன்னாள் மந்திரி ஆர்.கே.ரோஜா, தமிழக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு உள்பட பலர் சாமி தரிசனம் செய்தனர்.
கோவிலுக்கு சென்ற அவர்களை அதிகாரிகள் வரவேற்று தரிசன ஏற்பாடுகளை செய்தனர். கோவிலில் சாமி தரிசனம் செய்ததும், அவர்களுக்கு ரெங்கநாயகர் மண்டபத்தில் வேத பண்டிதர்கள் வேத மந்திரங்களை ஓதி ஆசி வழங்கினர். சேஷ வஸ்திரம் அணிவித்து கவுரவித்தனர். ஸ்ரீவாரி லட்டு, தீர்த்தப் பிரசாதம், சாமி படம் ஆகியவற்றை அதிகாரிகள் வழங்கினர்.