உத்தர பிரதேச முதல்-மந்திரியை சந்தித்த பிரபு தேவா


Actor Prabhu Deva meets Uttar Pradesh Chief Minister
x

'கண்ணப்பா' படத்தில் நடன இயக்குனராக பிரபு தேவா பணிபுரிந்துள்ளார்.

லக்னோ,

1989-ல் வெளியான 'இந்து' திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானவர் பிரபு தேவா. "காதலன், லவ் பேர்ட்ஸ், மிஸ்டர் ரோமியோ" என பல்வேறு படங்களில் நடித்து, ரசிகர்களின் மனதில் இடம் பிடித்திருக்கிறார். பல்வேறு படங்களில் நடன இயக்குனராகவும் பணிபுரிந்து வருகிறார்.

இவ்வாறு 30 ஆண்டுகால சினிமா வாழ்க்கையில் தனக்கென்று தனி அடையாளத்தை உருவாக்கி வைத்துள்ளார் பிரபு தேவா. இவர் தற்போது 'கண்ணப்பா' என்ற படத்தில் நடன இயக்குனராக பணிபுரிந்துள்ளார். இப்படத்தில், விஷ்ணு மஞ்சு, மோகன் பாபு , பிரபாஸ் , அக்சய் குமார் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

இந்நிலையில், உத்தரபிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத்தை 'கண்ணப்பா' படக்குழுவினருடன் சென்று பிரபு தேவா சந்தித்திருக்கிறார். அதன்படி, நடிகர் பிரபு தேவா, விஷ்ணு மஞ்சு மற்றும் மோகன் பாபு ஆகியோர் அவரை நேரில் சந்தித்துள்ளனர்.

1 More update

Next Story